கொச்சி அருகே விடுதி மாடியில் ஏறி மாணவிகள் தற்கொலை மிரட்டல்

346 0

201610141024407693_student-suicide-threat-hostel-floor-climb-near-cochin_secvpfகொச்சி அருகே விடுதி மாடியில் ஏறி மாணவிகள் தற்கொலை செய்யப் போவதாக அவர்கள் கோ‌ஷம் போட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

கேரள மாநிலம் கொச்சி அருகே காக்கநாடு என்ற இடத்தில் அரசு மாணவியர் விடுதி உள்ளது. இங்கு ஏழை மாணவிகள் தங்கி இருந்து படித்து வருகிறார்கள்.

இந்த விடுதியில் உள்ள 32 மாணவிகள் திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரும் அந்த விடுதியின் மொட்டைமாடிக்கு ஏறிச் சென்று கீழே குதித்து தற்கொலை செய்யப் போவதாக அவர்கள் கோ‌ஷம் போட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

மாணவிகள் போராட்டம் பற்றிய தகவல் பரவியதும் விடுதி நிர்வாகிகள் அவர்களுடன் சமரச பேச்சு நடத்தினார்கள். அப்போது மாணவிகள் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் நேரில் வந்தால்தான் தங்கள் போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறினார்கள்.

இதைதொடர்ந்து அங்கு கலெக்டர் முகம்மது, போலீஸ் சூப்பிரண்டு ஹாசன், காங்கிரஸ் எம்.எல்.ஏ. தோமஸ், நகரசபை தலைவி நீனு மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்றனர். அவர்கள் மாணவிகளிடம் சமரச பேச்சு நடத்தினார்கள்.

அப்போது மாணவிகள் தங்களை விடுதியில் கடுமையாக வேலை வாங்குவதாகவும் சரியான உணவு கொடுக்காமல் கொடுமைப்படுத்துவதாகவும் பெற்றோரைக்கூட சந்திக்க விடுவதில்லை என்று சரமாரியாக புகார் கூறினார்கள்.

இதைதொடர்ந்து கலெக்டர் உள்பட அனைவரும் ஏணிமூலம் மாடிக்கு ஏறிச்சென்று மாணவிகளை சமரசப்படுத்தினார்கள். சுமார் 3 மணி நேரத்திற்கு பிறகு மாணவிகள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.