அப்துல்கலாம் சமாதி வளாகத்தில் ரூ.15 கோடியில் மணி மண்டபம்

335 0

201610141004011797_abdul-kalam-samadhi-campus-rs-15-crore-for-construction-work_secvpfராமேசுவரம் அருகே உள்ள பேய்கரும்பு என்ற இடத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் சமாதி உள்ளது. இங்கு கடந்த ஜூலை 27-ந்தேதி முதலாம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி நடந்தது. அப்போது அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு கண்காட்சி, அறிவுசார் மையம், நினைவு மண்டபம் ஆகியவற்றை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

இதை தொடர்ந்து அப்துல்கலாமின் 85-வது பிறந்த நாளையொட்டி முதல் கட்டமாக 27 ஆயிரம் சதுரமீட்டர் நிலப்பரப்பில் ரூ.15 கோடி மதிப்பில் மணி மண்டபம் கட்டுவதற்கான பணி நாளை (சனிக்கிழமை) பூமி பூஜையுடன் தொடங்கப்பட உள்ளது.

இதையொட்டி இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் கட்டிட பிரிவு பொறியாளர் சீனிவாசலு தலைமையில் சமாதி வளாக பகுதியில் ஆய்வு செய்யப்பட்டது. மணி மண்டபம் கட்டப்படும் பகுதியில் வரைபடத்தின்படி அளவீடு செய்து குறியீடு கம்பிகள் ஊன்றும் பணிகளில் பொறியாளர்கள் ஈடுபட்டனர்.

இது குறித்து திட்டப்பணி ஒப்பந்ததாரர் ஜெகநாதன் கூறியதாவது:-நாளை தொடங்கும் மணி மண்டப பணிகள், வருகிற 2017-ம் ஆண்டு ஜூலை 10-ந்தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அப்துல்கலாமின் 2-ம் ஆண்டு நினைவு தினத்தன்று புதிய மணிமண்டபத்தை திறந்து அதில் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 2-ம் கட்டப் பணியாக ரூ.35 கோடி மதிப்பில் அறிவுசார் மையம் மற்றும் கண்காட்சி அமைப்பதற்கான பணிகள் தொடங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.