காவிரி மேலாண்மை அமைக்க வலியுறுத்தி திருச்சியில் நாளை காங்கிரஸ் உண்ணாவிரதம்

345 0

201610141000261519_congress-hunger-strike-in-trichy-for-cauvery-management_secvpfகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி திருச்சியில் நாளை காங்கிரஸ் சார்பில் உண்ணாவிரதம் நடைபெறுகிறது. போராட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தலைமை தாங்குகிறார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி திருச்சியில் நாளை காங்கிரஸ் சார்பில் உண்ணாவிரதம் நடைபெறுகிறது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில், தமிழகத்திற்கும் தமிழக மக்களுக்கும் காவிரி பிரச்சனையில் அநீதி இழைக்கும் பா.ஜனதா அரசை கண்டித்தும், தமிழக விவசாயிகள் நலன் காக்க காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க கோரியும் நாளை (சனிக்கிழமை) திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.

போராட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தலைமை தாங்குகிறார். சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி முன்னிலை வகிக்கிறார். திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெரோம் ஆரோக்கிய ராஜ் வரவேற்கிறார்.

உண்ணாவிரத போராட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் எம்.பி., முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் குமரி ஆனந்தன், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், கே.வி.தங்கபாலு, கிருஷ்ணசாமி, முன்னாள் மத்திய மந்திரிகள் சுதர்சன நாச்சியப்பன், மணி சங்கர் அய்யர், ஆர்.பிரபு, தனுஷ்கோடி ஆதித்தன்,

முன்னாள் எம்.எல்.ஏக்கள் டாக்டர் ஜெயக்குமார், டாக்டர் செல்லக்குமார், மற்றும் திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆர்.சி.பாபு, வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயப்பிரகாஷ் மற்றும் மாநில காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அனைத்து பிரிவு தலைவர்கள், மாவட்ட தலைவர்கள், விவசாயிகள் ஏராளமானோர் பங்கேற்கிறார்கள்.

நாளை காலை 7 மணிக்கு உண்ணாவிரத போராட்டம் தொடங்குகிறது. போராட்டத்தின் போது தலைவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசுகிறார்கள். உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் உழவர் சந்தை மைதானத்தில் ஆயிரக்கணக்கானோர் அமரும் வகையில் சாமியானா பந்தல், நாற்காலிகள் போடப்பட்டுள்ளது.

பல்வேறு இடங்களில் இருந்து இன்று மாலையே காங்கிரஸ் தொண்டர்கள் திருச்சியில் குவிய தொடங்குகிறார்கள். போராட்டத்தையொட்டி உழவர் சந்தை மைதானம் பகுதியில் போலீஸ் பாதுகாப்பும் போடப்படுகிறது.