கடந்த உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்த அமெரிக்க பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அமெரிக்க வர்த்தக திணைக்களத்தின் கீழ் இலங்கையில் கடமையில் ஈடுபட்டிருந்த செல்சியா டிகமினாடா என்ற அதிகாரி கொழும்பு செங்ரீலா ஹோட்டலில் இடம்பெற்ற தாக்குதலின் போது காயமடைந்தார்.
குறித்த பெண் மேலதிக சிகிச்சைக்காக விமானம் ஊடாக சிங்கப்பூருக்கு கொண்டு செல்லப்பட்டிருந்ததுடன், அங்கு அவர் உயிரிழந்துள்ளார்.
இது சம்பந்தமாக கருத்து தெரிவித்த அமெரிக்க வணிக திணைக்களத்தின் செயலாளர், உலகம் பூராகவும் பயங்கரவாதத்திற்கு எதிராக தொடர்ந்து போராட வேண்டும் என்று கூறியுள்ளார்.