அமெரிக்காவில் பாகிஸ்தான் சிறுவன் மீது இனவெறி தாக்குதல்

302 0

201610141053080389_pakistani-boy-7-beaten-bullied-on-us-schoolbus-because_secvpfஅமெரிக்காவில் பாகிஸ்தான் சிறுவன் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டது.

அமெரிக்காவில் வடக்கு கரோலினாவை சேர்ந்தவர் ஷீசன், உல்-ஹசன், உஸ் மானி, பாகிஸ்தானை சேர்ந்தவர். இவரது மகன் அப்துல் உஸ்மானி (7). இவன் வடக்கு கரோலினா அருகே கேரி என்ற இடத்தில் உள்ள ஒரு தொடக்க பள்ளியில் படித்து வருகிறான்.

சம்பவத்தன்று பள்ளியில் இருந்து வீட்டுக்கு பஸ்சில் திரும்பிக்கொண்டிருந்தான். அப்போது பஸ்சில் இருந்து 5 சக மாணவர்கள் சேர்ந்த அப்துல் உஸ்மானியை சரமாரியாக அடித்து உதைத்தனர். அதில் காயம் அடைந்தான்.

இது குறித்து சிறுவன் அப்துல் உஸ்மானியின் தந்தை ‘பேஸ்புக்‘ இணைய தளத்தில் இது குறித்து பதிவு செய்துள்ளார். ‘அதற்கு டொனால்டு டிரம்ப்பின் அமெரிக்கா வரவேற்கிறது என தலைப்பிட்டுள்ளார்.

தனது மகன் அப்துலின் போட்டோவையும் பிரசுரித்து நடந்த சம்பவத்தை விவரித்துள்ளார். தனது மகன் முஸ்லிம் என்பதால் பள்ளி பஸ்சிலேயே இன வெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என குற்றம் சாட்டியுள்ளார்.

இச்சம்பவத்தை தொடர்ந்து தனது மனைவி மற்றும் 3 குழுந்தைகளுடன் பாகிஸ்தானுக்கு செல்ல ஹசன் உஸ்மானி முடிவு செய்துள்ளார். அமெரிக்காவில் தங்களுக்கு பாதுகாப்பு இருக்காது என கருதுவதாக தெரிவித்துள்ளார்.