ஆடைத்தொழிற்சாலை பணியாளர்கள் பயணித்த பஸ் ஒன்று பலாங்கொடை – ராச்சகல வீதியில் விபத்திற்குள்ளானதில் ஆடைதொழிற்சாலையில் பணிபுரிந்த 23 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பஸ் வீதியை விட்டு விலகி வயல் வரம்பில் மோதி இன்று காலை விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் காயங்களுக்குள்ளான ஆடைத்தொழிற்சாலை பணியாளர்கள் பலாங்கொடை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் .
பலாங்கொட வலேபொட பகுதியில் அமைந்து ஆடைத்தொழிற்சாலையின் வாகனம் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் காயங்களுக்குள்ளானவர்கள் வலேபொட பிரதேசத்தை சேர்ந்த என்பது தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவத்திற்கு சாரதியின் கவனயீனம் காரணமாக என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.