வீசா இன்றி இலங்கையில் தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் 48 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளதாக, குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, வீசா காலம் நிறைவடைந்த பின்னரும் நாட்டில் தங்கியிருந்த 108 பேர் கடந்த சில தினங்களில் கைது செய்யப்பட்டதாக, குடிவரவு, குடியல்வு திணைக்களத்தின் ஊடகப்பேச்சாளர் கயான் மிலிந்த தெரவித்துள்ளார்.
கடந்த வாரத்தில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த 13 பேர் கைது செய்யப்பட்டதுடன், அவர்களில் 8 பேர் பாகிஸ்தான் பிரஜைகளாவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இன்று கொழும்பிலுள்ள ஹோட்டலொன்றில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் சிலர் கைதுசெய்யப்பட்டதாக, கயான் மிலிந்த குறிப்பிட்டுள்ளார்.
தமது கட்டுப்பாட்டின் கீழுள்ள வெளிநாட்டவர்கள் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.