முக்கிய பயங்கரவாதிகள் இருவர் வெளிநாட்டில் தலைமறைவு

330 0

உயிர்த்த ஞாயி­றன்று இடம்­பெற்ற தற்­கொலை குண்­டுத்­தாக்­கு­தல்­களை நடத்­திய, தடைசெய்யப்பட்ட தேசிய தெளஹீத் ஜமா அத் எனும் அடிப்­ப­டை­வாத அமைப்பின் முக்­கி­யஸ்­தர்கள் என கரு­தப்­படும் இரு பயங்­க­ர­வா­திகள் வெளி­நா­டொன்­றுக்கு தப்பிச் சென்று அங்கு தலை­ம­றை­வாக இருப்­ப­தாக உள­வுத்­துறை தக­வல்­களை வெளிப்­ப­டுத்­திக்­கொண்­டுள்­ளது.

குறித்த இரு­வரும் தற்­கொலை குண்­டுத்­தாக்­கு­தல்­களின்   பின்­ன­ணியில் இருந்து செயற்­பட்­டி­ருக்க வேண்டும் என நம்பும் விசா­ர­ணை­யா­ளர்கள், அவர்கள் இரு­வ­ரையும் கைது செய்து நாட்­டுக்கு அழைத்­து­வர  திட்டம் வகுத்­துள்­ள­தா­கவும், அது தொடர்பில் இரா­ஜ­தந்­திர மட்ட செயற்­பா­டுகள் இடம்­பெ­று­வ­தா­கவும் பாது­காப்பு அமைச்சின் உயர் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார்.

இந்த தாக்­கு­தல்­க­ளுடன் நேர­டி­யாக தொடர்­பு­பட்ட அனை­வரும் கைது செய்­யப்­பட்­டுள்ள நிலை­யி­லேயே பின்­ன­ணியில் செயற்­பட்ட அனை­வரும் அடை­யாளம் காணப்­பட்­டுள்­ளனர். அதன்­ப­டியே அவர்­களைக் கைது செய்யும் நட­வ­டிக்­கை­களில் ஒரு அங்­க­மாக இவ்­வி­ரு­வரும்  கைது செய்­யப்­ப­ட­வுள்­ளனர். அத்­துடன், தடை செய்­யப்­பட்ட தேசிய தெளஹீத் ஜமாத் எனும் அடிப்­ப­டை­வாத அமைப்பின் பல முக்­கி­யஸ்­தர்கள் சிக்­கி­யுள்ள நிலையில் விசா­ர­ணைகள் தொடர்­வ­தாக அந்த அதி­காரி சுட்­டிக்­கா­ட­டினார்.

இத­னி­டையே, தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களை நெறிப்­ப­டுத்­தி­ய­தாக நம்­பப்­படும் தற்­கொலை குன்­டு­தா­ரி­களில் ஒரு­வ­ரான மொஹம்மட் சஹ்ரான் ஹாஷிமின் மிக பிர­தான சகாக்­க­ளுக்கு சொந்­த­மான தெமட்­ட­கொட மஹ­வில கார்டன் வீடு முற்­றாக சி.ஐ.டி.யின்  பொறுப்பின் கீழ் கொன்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது.  குறித்த வீட்­டிலும் தற்­கொலை தக­கு­தல்கள் நடாத்­தப்­பட்­டி­ருந்த நிலையில், அது தொடர்பில் தெமட்­ட­கொடை பொலி­சா­ரிடம் இருந்து சிஐ.டி. விசா­ர­ணை­களைப் பொறுப்­பேற்று நேற்று கொழும்பு பிர­தான நீதி­வா­னுக்கு அறி­ரிக்கை சமர்ப்­பித்­தது. இதன்­போதே வீட்டை பொறுப்­பேற்­ற­தாக சி.ஐ.டி. நீதி­வா­னுக்கு தெரி­வித்­தது.

இவ்­வாறு சி.ஐ.டி.யால் பொறுப்­பேற்­கப்­பட்ட சொகுசு வீடா­னது, சஹ்­ரா­னுடன் ஷங்­ரில்லா ஹோட்­டலில் தாக்­குதல் நடாத்­திய மொஹம்மட் இப்­ராஹீம் மொஹம்மட் இல்ஹாம் மற்றும் சினமன் ஹோட்­டலில் தாக்­குதல் நடத்­திய மொஹம்மட் இப்­ராஹீம் மொஹம்மட் இன்சாப் ஆகியோர் வசித்த, அவர்­க­ளது தந்­தை­யான பிர­பல கோடீஸ்­வர வர்த்­தகர் மொஹம்மட் இப்­ரா­ஹீ­முக்கு சொந்­த­மா­ன­தாகும்.   மொஹம்மட் இப­ராஹீம் உள்­ளிட்ட 19 பேர் தெமட்­ட­கொடை குன்­டுத்­தாக்­குதல் சம்­பவம் தொடர்பில் சி.ஐ.டி.யின் மனிதப் படு­கொ­லைகள் குறித்த விசா­ரணைப் பிரிவில் தடுத்து வைத்து விசா­ரிக்­கப்­ப­டு­வ­தாக நேற்று மன்றில் ஆஜ­ரான சி.ஐ.டி. அதி­காரி நீதி­வா­னுக்கு அறி­வித்தார்.

தெமட்­ட­கொடை தாக்­கு­தலில் இறந்­த­வர்­களின் டி.என்.ஏ. சோத­னைகள் ஊடாக மரண விசா­ர­ணை­களை துரி­தப்­ப­டுத்த உத்­த­ர­விட்ட நீதிவான் இந்த தாக்­குதல் சம்­பவம் தொடர்­பி­லான வழ்­ககை எதிர்­வரும் 14 ஆம் திக­திக்கு ஒத்­தி­வைத்தார்.

என்.ரி.ஜே. கொழும்பு அமைப்­பா­ள­ருக்கு பிணை மறுப்பு

இத­னி­டையே தடை செய்­யப்­பட்­டுள்ள பயங்­க­ர­வாத அமைப்­பான தேசிய தௌஹீத் ஜமாத்  அமைப்பின் கொழும்பு மாவட்ட அமைப்­பாளர்  என கூறப்­படும் மொஹமட் பாரூக் மொஹமட் பவாஸை எதிர்­வரும் 21ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க நீதி­மன்றம் நேற்று உத்­த­ர­விட்­டது.கொழும்பு பிர­தான நீதவான் லங்கா ஜய­ரத்ன முன்­னி­லையில் சிறைச்­சா­லைகள் அதி­கா­ரி­களால் சந்­தே­க­நபர் ஆஜர்­ப­டுத்­தப்­பட்­டதை அடுத்து, இவ்­வுத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டது.

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் கொழும்பு மாவட்ட ஏற்­பாட்­டா­ள­ராக சந்­தே­க­நபர் செயற்­பட்டு வந்­துள்­ளமை விசா­ர­ணை­களின் ஊடாக உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக இதன்­போ­து­மன்­றுக்கு பொலிஸார் அறி­வித்­துள்­ளனர்.இதே­வேளை, தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் ஆவ­ணங்கள், காணொ­ளிகள் என்­பன சந்­தே­க­ந­ப­ரி­ட­மி­ருந்து பறி­முதல் செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் அவை தொடர்பில் மேல­திக விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் பொலிஸார் குறிப்­பிட்­டுள்­ளனர்.சந்­தே­க­ந­பரை பிணையில் விடு­விக்­கு­மாறு அவர் சார்பில் ஆஜ­ரா­கிய சட்­டத்­த­ரணி மன்றில் கோரிக்கை விடுத்தார்.

பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் சந்­தே­க­நபர் மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­மையால் அவ­ருக்கு பிணை வழங்­கு­வ­தற்­கான அதி­காரம் தமக்கு இல்லை என, பிர­தான  நீதவான் லங்கா ஜய­ரத்ன இதன்­போது தெரி­வித்­துள்ளார்.அதற்­க­மைய, எதிர்­வரும் 21 ஆம் திகதி வரை சந்­தே­க­ந­பரை தொடர்ந்தும் விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு கொழும்பு பிர­தான  நீதவான் லங்கா ஜய­ரத்ன உத்­த­ர­விட்­டுள்ளார்.

ஐ.எஸ்.ஐ.எஸ். உடன் தொடர்பா?; தடுத்து வைத்து விசா­ரிக்­கப்­படும் முஸ்லிம் காங்­கிரஸ் உறுப்­பினர்

ஐ.எஸ். ஐ.எஸ். பயங்­க­ர­வாத அமைப்­புடன் தொடர்­புள்­ள­தாக சந்­தே­கத்தில் கைது  செய்­யப்­பட்ட ஸ்ரீ ஜய­வர்­த­ன­புர மாந­கர சபையின் ஸ்ரீ லங்க  முஸ்லிம் காங்­கிரஸ் உறுப்­பினர் ஹாஜா மொஜிதீன் அல் உஸ்மான், அவ­ரது சகோ­தரர் உள்­ளிட்ட நால்­வரை தடுப்புக் காவலில் வைத்து விசா­ரிக்க கொழும்பு மேல­திக நீதிவான் காஞ்­சனா நெரஞ்­சனா டி சில்வா நேற்று அனு­ம­தி­ய­ளித்தார்.

ஹாஜா அமொ­ஹிதீன் அல் உஸ்மான், ஹாஜா மொஹிதீன் சுல்தான் பாரிஸ்,  மொஹம்மட் அல்லாத், மொஹம்மட் பெளசான் ஆகி­யோ­ரையே இவ்­வாறு தடுத்து வைக்க நீதி­மன்றம் அனு­ம­தி­ய­ளித்­தது.   பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழ் 72 மணி நேரம் சந்­தேக நபர்­களை விசா­ரணை செய்த பின்னர் பாது­காப்பு அமைச்­சி­ட­மி­ருந்து பெற்ற 90 நாள் தடுப்புக் காவலில் வைத்து விசா­ர­ணைகள் இடம்­பெ­று­வ­தாக நீதி­வா­னுக்கு  வெலிக்­கடை பொலிசார் அறி­வித்­தனர்.

இத­னி­டையே பாது­காப்பை உறுதி செய்ய பொலிசார், முப்­ப­டை­யினர் நடாத்தும் சோதனை நட­வ­டிக்­கைகள் தொடர்ந்தும் முன்­னெ­டுக்­கப்­பட்­டு­வ­ரு­கின்­றன.

அதன்­படி முன்­னெ­டுக்­கப்­பட்ட சோதனை ஒன்றின் போது வவு­னியா அல­கல்ல அளுத்­கம பகு­தி­யி­லி­ருந்து சொப்பர் விமா­னங்­க­ளுக்கு பயன்­ப­டுத்­தப்­படும் 85 குண்­டு­களை பொலிஸார் மீட்­டுள்­ளனர்.

வவு­னியா – ஈரப்­பெ­ரி­ய­குளம் பொலி­ஸா­ருக்கு கிடைத்த இர­க­சிய தக­வ­லை­ய­டுத்து, மேற்­கொள்­ளப்­பட்ட தேடுதல் நட­வ­டிக்­கை­யின்­போதே இந்த குண்­டுகள் கைப்­பற்­றப்­பட்­டுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

அநு­ரா­த­புரம் – கலா­வெவ பகு­தியில் மெற்­கொள்­ளப்­பட்ட தேடுதல் நட­வ­டிக்­கை­யின்­போது 243 ஜெலனைட் குச்­சி­களும் வெடி மருந்­து­களும் பொலி­ஸாரால் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளன. இபொ­லோ­கம பொலி­சா­ருக்கு கிடைத்த தக­வலை அடுத்து இந்த சுர்­றி­வ­லைப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது கல்லுடைக்க பயன்படும் வெடிபொருட்கள் 12 கிலோ, இலத்திரனியல் டெட்டனைட்டர் என ஏராளமான பொருட்கள் சிக்கியுள்ளன. அனுமதிப் பத்திர நிபந்தனைகளை மீறியமைக்காக இதன்போது ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அநுராதபுரம் சேனபுர பகுதியில் பொலிஸார் நடத்திய சோதனை நடவடிக்கையின் போது இராணுவ சீருடைகள் இரண்டும் இராணுவ சீருடைகளை ஒத்த 54 உடைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன் போது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதேவேளை, மீரிகம பாதுராகொட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது வடிகாண் ஒன்றிலிருந்து இரண்டு கைக்குண்டுகளும் பொலிஸாரால் மீட்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.