தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த விமானப்படையினர் நேற்று முன்னெடுத்த சோதனை நடவடிக்கைகளின் ஊடாக மக்கள் தமது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளார்கள்.
பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து துரிதமான முன்னெடுக்கப்படும் என விமானப்படை ஊடகப்பேச்சாளர் கெப்டன் கிஹான் செனவிரத்ன தெரிவித்தார்.
கொழும்பு,கடுநாயக்க,மற்றும் இரத்மலான ஆகிய பிரதான விமானப்படை பிரிவுகளிலும், பலாலி, சீகிரியா,மொரவௌ, மீரிவவ, தியதலாவ, ஆகிய உப பிரதேசங்களில் விமானப்படையினர்பாடசாலைகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தியுள்ளதுடன்,அப்பிரதேசங்களின் பாதுகாப்பினையும் பலப்படுத்தியுள்ளனர்.
இதற்கமைய கடுநாயக்க விமானப்படையினர் போருதொட பிரதேசத்திலும் வீரவில பகுதியில் விமானப்படையினர் அட கொலனி பிரதேச்தில் விசேட சுற்றி வலைப்பு நடவடிக்கைகள் 02னை மேற்கொண்டுள்ளனர்.
அத்துடன் தியதலாவ விமானப்படையினர் பண்டாரவெல பிரதேச பொலிஸாரின் உதவியுடன் குற்றப்புலனாய்வு பிரிவினர் வழங்கிய இரகசிய தகவலுக்கமைய அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளில் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
கடந்த மாதம் 21ம் திகதிக் கு பிறகு ஆளில்லா விமானங்கள் மற்றும் ட்ரோன் கருவி பயன்பாடு ஆகியவை முழுமையாக தடை செய்யப்பட்டன.
இன்றும் இத்தீர்மானம் அமுலில் உள்ளது. அவசரகால சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட விடயங்களை தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் செயற்படுத்தினால் சட்டத்தின் பிரகாரம் தண்டனைக்குள்ளாகலாம்.சிவில் விமானசேவைகள் பிரிவின் விசேட பாதுகாப்பு திட்டமிடல்கள் தற்போது வகுக்கப்பட்டுள்ளன என தெரிவித்தார்.