பயங்கரவாத சூழலை அமைத்துக்கொடுத்தது முஸ்லிம் அரசியல்வாதிகளே. இப்போது இது கிறிஸ்தவர்களை இலக்கு வைத்து ஆரம்பிக்கப்பட்டிருக்கலாம் ஆனால் இறுதியில் இந்த பூதம் முஸ்லிகளையும் அழித்துவிட்டே முடிவுக்கு வரும் என்பதை மறந்துவிட வேண்டாம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக பாராளுமன்றில் தெரிவித்தார்.
அத்துடன் ரணில் விக்கிரமசிங்க தனது பிரதமர் நாற்காலியை தக்கவைக்கவும், அடுத்ததாக தான் ஜனாதிபதி ஆசனத்தில் அமர வேண்டும் என்ற கவிழும் உள்ளதுடன், ஜனாதிபதி மீண்டும் தான் ஜனாதிபதி ஆசனக்தில் அமர வேண்டும் என்ற ஆசையிலும் தேசிய பாதுகாப்பை கவனத்தில் கொள்ளாது அரசியல் காரணிகளை தேடவே புலனாய்வு துறை பயன்படுத்தப்பட்டது.
இந்த அரசியல் மோதலில் விளைவாகே கடந்த 21 ஆம் திகதி நாட்டில் பயங்கரவாதம் வெடித்தது. இது குறித்து பிரதமரும் ஜனாதிபதியும் இந்த சபையில் பொறுப்புக்கூறியாக வேண்டும். இந்த காரணிகளை கைவிட்டு செல்ல முடியாது. இந்த தாக்குதல் இரகசிய தாக்குதல் அல்ல. கடந்த காலங்களில் அளவுக்கு அதிகமாக இந்த தாக்குதல் குறித்து பேசப்பட்டு இயக்கமாக செயற்பட்டபோதே அதனை தடுக்க முடியாது நடக்கவிட்டு இந்த ஆட்சியாளர்கள் வேடிக்கை பார்த்தனர் .
அதேபோல் முஸ்லிம் அரசியல்வாதிகள் முஸ்லிம் மக்கள் குறித்து கவனிக்காது வியாபாரம் மட்டுமே செய்தீர்கள். முஸ்லிம் வாக்குகளை கொண்டு அரசியல் வியாபாரம் செய்தீர்கள். ஒவ்வொரு முஸ்லிம் அமைச்சரும் மக்களுக்காக அரசியல் செய்யவில்லை. இந்த அரசியல் வாதிகள் ஒருபோதும் தற்கொலை செய்யப்போவதில்லை ஏனெனில் இவர்களின் வாழ்க்கை வேறு. இவர்களுக்கு உள்ள சலுகைகள் எவற்றையும் கைவிட முடியாது.
ஆகவே தான் இந்த பூதத்தை சாடியில் இருந்து வெளியில் எடுத்தது முஸ்லிம் அமைச்சர்களே, அமைச்சர்கள் நேரடியாக குண்டுத்தாக்குதலை செய்யாது போனாலும் கூட அதற்கான சூழலை அமைத்துக்கொடுத்தது முஸ்லிம் அரசியல்வாதிகளே. இப்போது இது கிறிஸ்தவர்களை இலக்கு வைத்து ஆரம்பிக்கப்பட்திருக்கலம் ஆனால் இறுதியில் இந்த பூதம் முஸ்லிகளையும் அழித்துவிட்டே முடிவுக்கு வரும். இந்த பூதத்தை உருவாக்கிய நீங்களே இறுதியில் அதற்கு இலக்காவீர்கள் என்பதை மறந்துவிட வேண்டாம் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.