பொதுமக்களை அச்சமின்றி நாளாந்த வாழ்க்கையில் ஈடுபடுமாறு இலங்கை இராணுவதளபதி மகேஸ் சேனநாயக்க கேட்டுக்கொண்டுள்ளார்.
இலங்கையை அந்த துயரம் தாக்கிய தருணத்திலிருந்து முப்படையினரும் பொலிஸாரும் இதுவரை நிலைமையை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளனர் என மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
அவசரகால சட்டத்தின் கீழ் படையினருக்கு அரசாங்கம் அனைத்து அதிகாரங்களையும் வழங்கியுள்ளது என தெரிவித்துள்ள இராணுவதளபதி பொதுமக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் முக்கிய பகுதிகளிலும் பாதுகாப்பை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை படையினர் எடுத்துள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நிலைமை இயல்பிற்கு திரும்புகின்றது என தெரிவித்துள்ள இராணுவதளபதி பொதுமக்கள் போலியான தகவல்கள், வதந்திகள் காரணமாக தவறாக வழிநடத்தப்படுவதை தவிர்க்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.