புகையிரத திணைக்களத்துக்கு சொந்தமான நிலங்களை சட்டத்துக்கு புறம்பாக மோசடி செய்வதனூடாக திணைக்களத்தின் வருமானம் பெரிதும் பாதிப்படைகினறது என போக்குவரத்து சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணத்துங்க தெரிவித்துள்ளார்.
எனவே புகையிரத திணைக்களத்தின் வருமானத்தை அதிகரித்துக்கொள்வதற்காகவும் திணைக்களத்தின் வினைத்திறனான செயற்பாடுகளை அதிகரித்து கொள்ளும் நோக்கிலும் விரைவில் புகையிர திணைக்களத்துக்கு சொந்தமான நிலங்களை குத்தகை விடுவதற்கும் குத்தகை வருமானத்தை சேகரிப்தற்கும் தனியான இரு பிரிவுகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவாரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அமைச்சின் முன்னேற்றம் தொடர்பான மீளாய்வு குழு கூட்டம் இன்று பத்தரமுல்லையில் அமைந்துள்ள காரியாலயத்தில் இடம்பெற்றது. இதன்போது இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த கலந்துரையாடலில் அவர் மேலும் தெரவித்ததாவது,
புகையிரத திணைக்களத்துக்கு சொந்தமான நிலங்களை சட்டத்துக்கு புறம்பாக மோசடி செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கும், அவர்களுக்கான அறிவித்தல்களை விடுப்பது தொடர்பில் புகையிரத திணைக்களத்துக்கு சொந்தமான நில அதிகாரிகள் கால தாமதத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.
புகையிரத திணைக்களத்துக்கு சொந்தமான இடம் என்பது திணைக்களத்தின் சொத்தாகும். இந்த இடங்களின் முகாமைத்துவம் செய்வதனூடாக கிடைக்கும் வறுமானத்தில் புகையிரத திணைக்களத்தின் முழு செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும்மென அமைச்சர் தெரவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.