ஒவ்வொரு மதங்களுக்கும் தனி அமைச்சு தேவையில்லை – தயாசிறி

340 0

இலங்கையில் இந்து, பௌத்தம், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் உள்ளிட்ட பிரதான மதங்களுடன் ஏனைய மதங்களும் பின்பற்றப்படுகின்றன. இவை அனைத்திலும் உட்பிரிவுகளும் அவற்றுக்கிடையில் கருத்து முரண்பாடுகளும் காணப்படுகின்றன. ஆனால் அவை ஒரு போதும் அடிப்படைவாதமாகவும், இவ்வாறான பயங்கரவாத செயற்பாடுகளாகவும் வெளிப்பட்டதில்லை. முஸ்லிம் சமயத்தில் உள்ள தௌஹித் ஜமாஅத் என்ற பிரிவு மாத்திரமே இவ்வாறு செயற்படுகின்றது.

எனவே இவ்வாறான பிரிவிகளையும் அடிப்படைவாதங்ககளையும் இல்லதொழிப்பதற்கு இந்து, பௌத்தம், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் சமய அலுவல்கள் என ஒவ்வொரு மதத்துக்கும் தனித்தனியாகக் காணப்படுகின்ற அமைச்சுக்களை ஒரே அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கான நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

அத்துடன் சுதந்திர கட்சி உறுப்பினர்களோ அல்லது கட்சியைச் சேர்ந்தவர்களோ பயங்கவாதத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டால் அதில் நாம் ஒருபோதும் தலையிடப்போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.