எகிப்து அழகி கிளியோபட்ரா போல் அழகு பெற வேண்டுமானால் பசுவின் சிறுநீரை பயன்படுத்துங்கள் என்று குஜராத் மாநில பசு பாதுகாப்பு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
பெண்கள் தங்கள் அழகை பாதுகாக்கப்பதற்கான ஆலோசனைகளை அந்த வாரியம் வழங்கியுள்ளது.
பெண்கள் பசும்பால், நெய், பசுவின் சாணம் மற்றும் சிறுநீர் ஆகிய பொருட்கள் கொண்டு முகத்திற்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதன்மூலம் அவர்களது தோல் பொலிவு பெறும். உலகின் மிக அழகான பெண்ணாக கருதப்பட்ட எகிப்து அரசி கிளியோபட்ரா குளிப்பதற்கு பசும்பாலைத்தான் பயன்படுத்தினாள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த வாரியத்தின் இணையதளத்தில் பல்வேறு வகையான வீட்டு மருத்துவங்களை பற்றி எடுத்துரைக்கும் ‘ஆயூர்வேத கீதா’ என்ற பகுதியிலும் இத்தகைய கருத்துக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன.
அதில் பசுவின் சிறுநீர் மூலம் மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறையின் காரணமாக அழகான, கம்பீரமான, மற்றவர்களை கவரக்கூடிய தோற்றம் பெண்களுக்கு கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இத்தாலி, ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இது தொடர்பாக பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று இருப்பதாகவும் இந்த இணையதளம் தெரிவிக்கிறது.
கிளியோபட்ரா பசும்பாலில் குளித்தார் என்பது தொடர்பாக, இந்த வாரியத்தின் தலைவர் வல்லப கத்ரியாவிடம் கேட்ட பொழுது அவர் ‘கிளியோபட்ரா குளித்திருக்க வாய்ப்பு உண்டு’ என்று பொருள் பட பதில் அளித்தார்.
ஆனால் சரித்திர பூர்வமான தகவல்களின் படி கிளியோபட்ரா கழுதை பாலில் தான் குளித்திருக்கிறார் என்று கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.