கடந்த 21ஆம் திகதி நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுதாரிகளுக்கு, வாகனங்களைப் பெற்றுக்கொடுத்த நபர் தொடர்பானத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதற்கமைய, குறித்த நபர் தெமட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்தவரென்றும், இவர் வாகனங்களை வாடகைக்கு வழங்குவபர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நபரின் வாடகை வாகனங்கள் காத்தான்குடி, மாத்தளை, காலி, கொழும்பு போன்ற பிரதேசங்களுக்கும் தீவிரவாதிகளால் கொண்டுச் செல்லப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.
இச் சந்தேநபர் தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற தினத்தில் நீர்கொழும்பு- கட்டுவாப்பிட்டிய தேவாலயத்துக்கு அருகிலுள்ள பிரதேசம் ஒன்றில் இருந்துள்ளமை உறுதியாகியுள்ளதாகவும், இந்த விடயம் தொடர்பிலான விசாரணைகளை பாதுகாப்பு பிரிவு ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.