செங்கடலில் இருக்கும் அமெரிக்க போர் கப்பல் ஒன்று சில தினங்களுக்குள் இரண்டாவது முறையாகவும் ஏவுணை தாக்குதலுக்கு இலக்கானதை அடுத்து யெமனின் ராடார் தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.
யெமனின் ஹூத்தி கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டு பகுதியில் இருக்கும் தளங்கள் மீதே தாக்குதல் நடத்தப்பட்டதாக பென்டகன் குறிப்பிட்டுள்ளது.
கடந்த 2015 மார்ச் மாதம் யெமன் மோதல் ஆரம்பிக்கப்பட்டது தொடக்கம் கிளர்ச்சியாளர் இலக்குகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவது இது முதல் முறையாகும்.
அண்மைய ஏவுகணை தாக்குதல்களுடன் தொடர்புபட்டது என கண்டறியப்பட்ட மூன்று ராடார் தளங்களே தாக்கி அழிக்கப்பட்டதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு ஜனாதிபதி பராக் ஒபாமா ஒப்புதல் அளித்ததாகவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.