அமெரிக்க பாடகருக்கு இலக்கிய நோபல் விருது

355 0

coltkn-10-14-fr-05172525522_4883295_13102016_mss_cmyஅமெரிக்க பாடகர் பொப் டிலன் 2016ஆம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் விருதை வென்றுள்ளார்.

அமெரிக்க பாடல் மரபில் புதிய கவிதை வெளிப்பாட்டை கொண்டுவந்ததற்காக 75 வயது டிலனுக்கு இந்த விருது வழங்கப்படுவதாக நோபல் குழு குறிப்பிட்டுள்ளது.

ரொபட் அலன் சிம்மர்மான் என்ற இயற்பெயருடன் 1941 ஆம் ஆண்டு பிறந்த டிலன் 1951ஆம் ஆண்டு மின்னசோட்டாவில் இருக்கும் தேநீர் விடுதியில் தனது இசை பயணத்தை ஆரம்பித்தார்.

அமெரிக்காவின் சமகால பிரச்சினைகள் பற்றிய பாடல்கள் காரணமாக 1960களில் அவரது சிறந்த படைப்புகள் பிறந்தன. அவரது சில பாடல்கள் சிவில் உரிமை அமைப்புகள் மற்றும் யுத்த எதிர்ப்பு பிரசாரங்களின் முழக்கமாக ஒலித்தன.

கோல்டன் குளோப், கிராம்மி விருதுகளைப் பெற்றுள்ள பொப் டிலன், நாட்டுப் புற பாடகர், ஓவியர், எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.