கணவனின் தாக்குதலில் மனைவி பலி

263 0

இபலோகம, கடியங்கல பிரதேசத்தில் கணவன் கூரிய ஆயுதங்களால் தாக்கியதில் மனைவி உயிரிழந்துள்ளார்.

குடும்ப தகராறு மோதலாக மாறியதையடுத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொணபதிராவ பிரதேசத்தில் வசிக்கும் 40 வயதுடைய பெண் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இபலோகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.