அருகாமை சூரிய குடும்பம் ஒன்றில் இருக்கும் உயிர்வாழ சாத்தியம் கொண்ட பூமியை ஒத்த வேற்று கிரகம் ஒன்றை படம் பிடிப்பதற்கு புதிய செய்மதியை அனுப்ப விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.
தனியார் நிதியில் உருவாக்கப்படவிருக்கும் ‘பிரொஜெக்ட் பிளு’ என்ற திட்டத்தின் கீழே வேற்று கிரகம் ஒன்றை முதல் முறை படம்பிடிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
அருகாமை சூரிய மண்டலமான அல்பா செண்டாரியை இலக்கு வைத்து 25 முதல் 50 மில்லியன் டொலர் செலவில் 2020ஆம் ஆண்டில் இந்த செய்மதியை அமைக்க அமெரிக்காவை தளமாகக் கொண்ட போட்லியோ நிறுவனம் எதிர்பார்த்துள்ளது.
எவ்வாறாயினும் அல்பா செண்டாரி சூரிய மண்டலம் 4.22 ஒளியாண்டு தொலைவில் உள்ளது. விநாடிக்கு 13,411 கிலோமீற்றர் வேகத்தில் பயணித்தாலும் மனிதன் அதனை எட்ட ஒரு நூற்றாண்டு தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் சலவை இயந்திரம் அளவான தொலைநோக்கி கொண்டே உயிர்வாழ சாத்தியம் கொண்ட கிரகத்தை படம்பிடிக்க விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்