யாழ்ப்பாணம், பளை பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த கேரள கஞ்சா 140 கிலோ 800 கிராமை பளை பொலிஸார் மீட்டுள்ளனர்.
நேற்று (05) பிற்பகல் 1 மணி அளவில் பளை பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் குறித்த கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த கஞ்சா போதைப்பொருள் 5 உர பொதிகளில் இருந்தே மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.