ஹொரண பகுதியில் நபர் ஒருவர் தனது வீட்டிற்கு முன்னால் எரிகாயங்களுடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக ஹொரண பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நேற்று (05) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஹொரண, வேவல பகுதியை சேர்ந்த 42 வயதுடைய அஜித் பிரியன்த எனும் நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக பானந்துறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் ஹொரண பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.