காலி பிரதேசத்தில் வீசாயின்றி தங்கியிருந்த சீன நாட்டு பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காலி துறைமுக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெவட்ட சந்தியில் நேற்று பிற்பகல் 12 . 15
மணியளவில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது நாட்டின் குடிவரவு குடியகல்வு சட்டத்திற்கு புறம்பாக தங்கியிருந்த சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
44 வயதுடைய சீன நாட்டவர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டள்ளார் . பொலிஸார் சந்தேக நபரை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளதுடன் , மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.