இலங்கையில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களின் பின்னர் 200 இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் உட்பட 600 வெளிநாட்டவர்கள் இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இலங்கைக்கு சட்டரீதியாக வந்துள்ளபோதும் தாக்குதல்களின் பின்னரான பாதுகாப்பு சூழலால் அவர்கள் வீசா காலம் முடிவடைந்த பின்னரும் தங்கியிருக்க வேண்டியிருந்தது.
அவர்களிடம் உரிய தண்டப்பணம் அறவிடப்பட்டதுடன், அவர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டதாக உள்விவகார அமைச்சர் வஜிர அபயவர்தன தெரிவித்தார்.
இவ்வாறு நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களில் 200 பேர் இஸ்லாமிய அறிஞர்கள் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
நாட்டுக்கு வரும் வெளிநாட்டு மதகுருமார் உள்ளூரில் உள்ளவர்களுக்கு அடிப்படைவாதக் கருத்துக்களை புகட்டி ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல் போன்ற தாக்குதல்களை நடத்த தூண்டலாம் என்ற அச்சம் அரசாங்கத்துக்குக் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.