உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலையடுத்து முடக்கப்பட்ட சமூக வலைத்தளங்கள் கடந்த வாரம் வழமைக்கு திரும்பிய நிலையில் இன்று இரவு முதல் மீண்டும் முடக்கப்பட்டுள்ளது.
கடந்த 21 ஆம் திகதி கொழும்பு உள்ளிட்ட 9 இடங்களில் தற்கொலை குண்டுதாரிகளால் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
அதன் போது வதந்திகள் ஊடுருவாமலிருக்க சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்ட நிலையில் கடந்த வாரம் மீண்டும் வழமைக்கு திரும்பின.
இந்நிலையில் இன்று மாலை நீர்கொழும்பு பகுதியில் ஏற்பட்ட அசாதாராண சூழ்நிலையையடுத்து குறித்தப் பகுதிகளுக்கு நாளை காலை 7 மணிவரை ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று இரவு முதல் மீண்டும் குறித்த சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.