பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அரச பாடசாலைகள் இன்று ஆரம்பம்

293 0

அடிப்­ப­டை­வா­தி­களின் அச்­சு­றுத்­த­லை­ய­டுத்து முப்­ப­டை­களின் தீவிர சோதனை நட­வ­டிக்­கை­களின் பின்னர் அரச பாட­சா­லை­களின் கல்வி நட­வ­டிக்­கைகள் இன்று திங்­கட்­கி­ழமை முதல் ஆரம்­ப­மா­கியுள்ளது.

இதற்­க­மை­வாக தரம் – 6 லிருந்து 13 ஆம் தர மாண­வர்­க­ளுக்­கான கற்றல் நட­வ­டிக்­கை­களை இன்று ஆரம்­பிக்­கவும், தரம் – 1 தொடக்கம் தரம் – 5 மாண­வர்­க­ளுக்­கான கல்வி நட­வ­டிக்­கை­களை எதிர்­வரும் 13 ஆம் திகதி திங்­கட்­கி­ழ­மை­யி­லி­ருந்து ஆரம்­பிக்­கவும் அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது.

உயிர்த்த ஞாயி­றன்று தேவா­ல­யங்கள் மீது மேற்­கொள்­ளப்­பட்ட தொடர் தற்­கொலை குண்­டுத்­தாக்­கு­தலின் பின்னர்  நாட்டில் பலத்த பாது­காப்பு நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. குறிப்­பாக பாட­சா­லை­களின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்தும் வகையில் நாட­ளா­விய ரீதியில் கடந்த ஒரு­வார கால­மாக அனைத்து பாட­சா­லை­க­ளி­னதும் பாது­காப்பு குறித்து கவ­னத்தில் கொள்­ளப்­பட்­டது.

அதன்­படி பாது­காப்பு கருதி பிற்­போ­டப்­பட்ட இரண்டாம் தவணை கல்வி நட­வ­டிக்­கைகள் பலத்த பாது­காப்­புக்கு மத்­தியில் மீண்டும் ஆரம்­ப­மா­க­வுள்­ளன.