கிளிநொச்சி கரைச்சியில் நடமாடும் சேவை(காணொளி)

439 0

mobile-serviceகிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் நடமாடும் சேவை ஒன்று இன்று நடைபெற்றது.

கிளிநொச்சியில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் மகளிர் சக்தி நிவாரண வேலைத்திட்டத்தின் கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சிபிபிரதேச செயலாளர் பிரிவிற்கான நடமாடும் சேவை நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் மகளீர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் ஒழுங்குபடுத்தப்பட்ட நடமாடும் சேவையின் முதலாவது சேவை இன்று கிளிநொச்சி கரைச்சிப்பிரதேச செயலர் பிரிவில் அமைந்துள்ள பெண்கள் வலுவூட்டல் நிலையத்தில் நடைபெற்றது.

நிகழ்வில் மகளீர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் செயலாளர் மேலதிக செயலாளர் கிளிநொச்சி மாவட்ட உதவிப்பிரதேச செயலாளர் ரி.பிருந்தாகரன் கரைச்சிப்பிரதேச செயலாளர் கோ.நாகேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்;து கொண்டனர்.