பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு இந்த தாக்குதலில் நேரடி தொடர்பு உள்ளது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
ஜெனிவாவின் 30/1 பிரேரணையும் அதனை ஏற்றுகொண்ட ரணில் விக்கிரமசிங்க அரசாங்கமுமே நாட்டில் இஸ்லாமிய பயங்கவாதத்தை பலப்படுத்த காரணமாகும்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இடைக்கால அரசாங்கம் அமைக்கலாம் என அரசங்கம் முயற்சித்து வருகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.
தேசிய சுதந்திர முன்னணி நேற்று கொழும்பில் நடத்திய மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இலங்கையில் குண்டு வெடிப்பு சம்பத்தை அடுத்து இப்ராகிமின் குடும்பத்தினர் மட்டும் அல்ல ஐ.எஸ் இஸ்லாமிய அமைப்பும் காரணம் என கூறியுள்ளது. தமது பிராந்தியம் தோற்ற காரணத்தினால் பழிதீர்க்க இங்கு தாக்கியதாக கூறினார்கள். இலங்கையை ஏன் இவர்கள் தெரிவு செய்தனர். இங்கு இஸ்லாமிய பிரிவினைவாத குழுக்கள் இல்லை. அப்படி இருக்கையில் ஏன் இலங்கையை இவர்கள் தெரிவு செய்தனர். இதனையே கவனிக்க வேண்டும். விடுதலைப்புலிகளை போல் நாட்டினை பிளவுபடுத்த சர்வதேசம் முயற்சித்து அதில் முடியாது போனமையும் இவ்வாறான அடுத்தகட்ட பயங்கரவாதத்தை நோக்கி செல்ல காரணமாக இருக்கலாம் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.