யாழ்ப்பாணம் சாவகச்சேரியிலிருந்து ஆதரவற்ற சிறுவர்களின் கல்வி மேம்பாட்டிற்கான நடமாடும் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை ஆதரவற்ற வறிய சிறுவர் கல்வி வளர்ச்சி மேம்பாடு என்ற அமைப்பினரால் உந்துருளி நடமாடும் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நுணாவில் சாவகச்சேரி காண்டைக்காடு ஞானவைரவர் ஆலயத்திலிருந்து ஆலய குரு சண்முகானந்தசர்மாவின் ஆசீர்வாதத்துடன் கல்வியியல உந்துருளி நடமாடும் சேவை ஆரம்பமாகியுள்ளது.
நேற்று ஆரம்பமான நடமாடும் சேவையை தலைவர் சுமூகலிங்கம் ஆரம்பித்து வைத்தார்.
உந்துருளி நடமாடும் சேவையின் மூலம் கிராமங்களுக்கு சென்று அக்கிராமங்களில் அமைந்துள்ள ஆலயங்களில் தங்கி கிராம சிறார்களின் கல்வி வளர்ச்சிக்கு தேவையானவற்றை இனங்காண்பதுடன், தியானம், யோகாசன பயிற்சிகளும் வழங்கப்படும் என நிலையப் பொறுப்பாளர் வி.ரி.வேலாயுதம் தெரிவித்தார.
சாவகச்சேரி நுணாவிலில் ஆரம்பமான நடமாடும் சேவை கதிர்காமத்தில் நிறைவுபெறவுள்ளது.