பேருவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 16 வாள்கனை பொலிஸார் மீட்கப்பட்டுள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் கொழும்பு விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசேட சோதனை நடவடிக்கைகளின் போது பேருவளை – மரதானை பகுதியில் சந்தேக நபரொருவர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டள்ளார்.
பொலிஸார் சந்தேக நபரிடம் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது பேருவளை பகுதியில் கொழும்பிலிருந்து 50 வாள்களை எடுத்துச் சென்று மறைத்து வைத்துள்ளமை தெரியவந்துள்ளது.
இதற்கமைய குறித்த பகுதியில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்ட பொலிஸார் நான்கு நபர்களிடமிருந்து 16 வாள்களை மீட்டுள்ளனர்.
மேற்படி சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.