தேசிய பாதுகாப்பு தொடர்பாக காணப்பட்ட அலட்சிய போக்கே இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு காரணமாகியது. மீண்டும் அவ்வாறானதொரு நிலைமை ஏற்படாதிருக்க வேண்டுமாயின் இராணுவத்திற்கு குறிப்பிட்டளவு அதிகாரங்கள் வழங்கப்பட்ட வேண்டும்,
அத்தோடு விடுதலை புலிகளுடனான போரின் பின்னர் காணப்பட்ட புலனாய்வு துறைகளின் கூட்டு கண்காணிப்பு நடவடிக்கை மீளமைக்கப்பட வேண்டும் என முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்தார்.
நாட்டில் ஏற்பட்ட தொடர் தாக்குதல்களிலிருந்து மீளெழுவது குறித்து ஆராய்வதற்காக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஸ்தாபித்த முன்னாள் தளபதிகள் மற்றும் பாதுகாப்பு செயலாளர் தலைமையிலான குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து இந்த குழுவின் அங்கத்துவர் என்ற வகையில் கருத்துரைக்கையிலேயே ஜெனரல் ஜகத் ஜயசூரிய மேற்கண்டவாறு தெரிவித்தார்.