அம்பாறை சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்மாந்துறை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வளாகத்தில் உள்ள வாழைத்தோட்டத்திற்குள் உரப்பபை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த நிலையில் ஆயுதங்கள் இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ஆலய நிர்வாகத்தினர் நேற்று ஆலய பராமரிப்பாளர்களால் சிரமதானப் பணியில் ஈடுபட்ட வேளை வாழைத்தோட்டத்திற்குள் சந்தேகத்திற்கு இடமான உரவேக் ஒன்று இருப்பதை அவதானித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ஆலய நிருவாகிகளுக்கு தெரியப்படுத்தியதை அடுத்து ஆலய நிர்வாகிகள் உடனடியாக சம்மாந்துறை பொலிஸில் முறைப்பாடு ஒன்றினை செய்திருந்தனர்.
இந்நிலையில் சம்பவ இடமத்திற்கு சம்மாந்துறைப் பொலிசார்,விசேட அதிரடிப்படையினர் மற்றும் குண்டு செயலிழக்கும் பிரிவினர் ஆகியோர் விரைந்து வந்து குறித்த உரப்பையை சோதனையிட்ட வேளை அதனுள் ரி 56 துப்பாக்கிக்கான மகஸீன், வாள் மற்றும் ரம்போகோடரி என்பன இராணுவத்தினரால் மீட்கப்பட்டன.
குறித்த ஆலய வளாகத்தில் இருந்து மீட்கப்பட்ட ஆயுதங்களை இராணுவம் கொண்டு சென்றதுடன் இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.