அமெரிக்காவில் கைவரிசை காட்டிய யாழ் இளைஞர்கள்!

371 0

போலி ஏடிஎம் அட்டைகள் மூலம் பெருந்தொகை பணத்தை கொள்ளையடித்த கனடாவை சேர்ந்த இரண்டு தமிழர்களை அமெரிக்க காவல்துறையினர்  கைது செய்துள்ளனர். 

கனடாவிலிருந்து அமெரிக்கா சென்று கொள்ளையடித்த இரண்டு தமிழர்களும், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

மொன்றியாலில் வசிக்கும் தருஷன் நிர்மலசந்திரன் (30) மற்றும் டொரோண்டோவில் வசிக்கும் அஜிதரன் ரவீந்திரன் (28) ஆகிய இளைஞர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் டொரொண்டோவிலிருந்து அட்லாண்டா வரை விமானமூலம் சென்று, அங்கிருந்து வாடகை வாகனத்தில் அமெரிக்காவின் கிழக்கு பகுதி நோக்கி சென்றனர். போகும் வழியெங்கும் உள்ள ATM இயந்திரங்களில் பணத்தை எடுத்தவாறு சென்றனர். கொள்ளை குறித்த தகவலை அறிந்ததும், இவர்களை பின்தொடர்ந்த பொலிசார் வழியில் இவர்கள் தங்கிய விடுதிக்குள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தி இவர்களை கைதுசெய்தார்கள்.

இவர்களிடமிருந்து பெருந்தொகைப்பணம், Gift Cards மற்றும் போலி ஏ.டி.எம் அட்டை தயாரிக்கும் இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட இவர்களை 500,000 டொலர் பிணையில் செல்ல நீதிபதி அனுமதித்தபோதும், இந்த பெரும் தொகையை செலுத்தி இவர்கள் பிணை பெறுவதில் உள்ள தடை குறித்து இவர்களின் வழக்கறிஞர்
ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார்.

கொள்ளையடித்த பணத்தை நியூயோர்க் சூதாட்ட விடுதியில் மாற்றி வெள்ளை பணமாக கனடாவுக்கு எடுத்துச் செல்வதாக அரச சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்தார்.