நேபாளம் நாட்டை சேர்ந்த பன்டனா நேபாள்(18) என்ற பெண் தொடர்ந்து தனியாக 126 மணிநேரம் நடனமாடி இந்திய பெண்ணின் முந்தைய கின்னஸ் சாதனையை முறியடித்தார்.
தனிநபராக அதிக நேரத்துக்கு இடைவிடாமல் நடனம் ஆடிய பெண் என்ற உலக சாதனையை இந்தியாவை சேர்ந்த கலாமண்டலம் ஹேமலதா என்பவர் கடந்த 2011-ம் ஆண்டில் ஏற்படுத்தியிருந்தார்.
அவரது கின்னஸ் சாதனையை நேபாளம் நாட்டை சேர்ந்த பன்டனா நேபாள்(18) என்ற பெண் முறியடித்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
கலாமண்டலம் ஹேமலதாவின் முந்தைய சாதனை 123 மணி நேரம் 15 நிமிடங்களாக இருந்த நிலையில் பன்டனா நேபாள் தொடர்ந்து தனியாக 126 மணிநேரம் நடனமாடி புதிய சாதனையை உருவாக்கியுள்ளார். இதற்கான அங்கீகார பத்திரத்தை கின்னஸ் பிரதிநிதிகள் நேற்று அவரிடம் ஒப்படைத்தனர்.
பன்டனா நேபாள்-ஐ தனது இல்லத்துக்கு வரவழைத்த நேபாளப் பிரதமர் ஷர்மா ஒலி அவருக்கு பரிசுகளை அளித்து வாழ்த்து தெரிவித்தார்.