உலகத்தில் உள்ள மிக பழமையான பிரபல்யமான கார்களில் ஒன்று யாழ்ப்பாணத்தில்

348 0

unnamedஉலகத்தில் உள்ள மிக பழமையான பிரபல்யமான கார்களில் ஒன்று தற்போது யாழ்ப்பாணத்தில் ஒருவரிடம் உள்ளது.

இந்த கார் 1929ஆம் இத்தாலியில் தயாரிக்கப்பட்டிருந்தது.

அந்த காலப்பகுதியில் இலங்கையை ஆங்கிலேயர் ஆட்சி செய்து வந்திருந்த நிலையில் இங்கே பல பண்ணையர்களும் இருந்திருந்தனர்.

அவ்வாறு ஒர் பண்ணையரான பொன்னையா இராஜேந்திரன் தனது பண்ணைகளை சுற்றிப்பார்க்கவும் தாம் வேட்டைக்கு செல்லும் போது இக் காரையே பயன்படுத்தியிருக்கிறார்.

இதற்காக இவர் இக் காரை 1931ஆம் ஆண்டு இத்தாலியில் இருந்து இக் காரை இறக்குமதி செய்து இலங்கையில் விற்பனை செய்து வரும் விற்பனை நிறுவனமொன்றின் ஊடாக இலங்கை பெறுமதி 3300ரூபாவிற்கு கொள்வனவு செய்துள்ளார்.

இதன் விலையை ஞாபகப்படுத்தும் வகையிலேயே இக் காரிற்கு இவர் 3300என்ற இலக்கத் தகடையும் வைத்துள்ளார்.

இதன்பின்னர் அவர் இறந்துபோகவே யாழ்.குடாநாட்டில் பெயர் போன கார் விற்பனை கொள்வனவாளரான குமாரசாமி ரவிச்செல்வன் (கப்பிரெக்ஸ் ரவி) என்பவருக்கு 1994 ஆம் ஆண்டு 2 அரை இலட்சத்திற்கு விற்பனை செய்துள்ளார்.

இதன்பின்னர் இக் காரை இன்றுவரை இவரே வைத்துள்ளார். தற்போது இக்காரை வைத்துள்ள இவர் காரை பற்றி கூறும் போது,

இது நீண்ட பராம்பரியம் மிக்க கார். இதனை பண்ணையார் வைத்திருக்கும் போது எங்களுக்கு பத்து வயதிருக்கும். பண்ணையார் யாழ்ப்பாணத்தில் தினகரன் விழா நடக்கும் போது அங்கு இடம்பெறும் கார் போட்டியில் இக் காரே முதலிடும் பெறும்.

அப்போதிருந்தே எனக்கு இந்த காரில் பிரியம் ஏற்பட்டது.
அதன்பின்னர் பண்ணையார் இறந்துபோக இக் காரை நான் ஆசைப்பட்ட பிரகாரமே எனக்கு விற்றுவிட்டார்.

அதன்பின்னர் இக் காரை என்னிடம் கொழும்பில் இருந்து கூட வந்து 45இலட்சம் வரை விலைக்கு கேட்டிருந்தனர் ஆனால் நான் விற்காமல் வைத்துள்ளேன்.

இக் காரில் முன்னால் உள்ள விளக்கின் மேல் சிவப்பு கல்லொன்று உள்ளது.

இது கார் ஒடும்போது விளக்கு ஒளிகின்றதா இல்லையா என்பது சாரதி ஆசனத்தில் இருந்தவாறே இதனூடாக பார்க்க முடியும்.

தற்போது இக் காருக்கு தேவையான பாகங்கள் ஒவ்வொன்றிலும் இரண்டு இரண்டு இலண்டனில் இருந்து வாங்கி வந்து வைத்துள்ளேன் என்றார்.

அத்துடன் இலங்கையில் எழுத்திலுள்ள ஒரேயொரு காரும் இதுவேயாகும்.

இக் காரை இறக்குமதி செய்த நிறுவனம் தற்போதும் கொழும்பில் அதே முகவரியில் உள்ளது அவர்கள் இறக்குமதி செய்த காரும் தன்னிடமுள்ளது என்றார்.