பல்கலைக்கழக மாவணர்களுக்கு பிணை

318 0

bailபேராதெனிய பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் ஒன்று தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 12 மாணவர்களுக்கு பிணை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணை இன்று கண்டி முதன்மை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே அவர்களுக்கு இந்த பிணை அனுமதி வழங்கப்பட்டது.

12 மாணவர்களும் தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி பேராதெனிய பல்கலைக்கழகத்தை சேர்ந்த மேலும் சில மாணவர்களை தாக்கிய சம்பவம் தொடர்பில் குறித்த மாணவர்கள் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.