பொதுநலவாய நாடுகள் அமைப்பில் இருந்து விலகும் மாலைத்தீவு

315 0

maldives-president-18-11-20பொதுநலவாய நாடுகள் அமைப்பில் இருந்து விலகுவதற்கு மாலைத்தீவு தீர்மானித்துள்ளது.

மாலைத்தீவின் அமைச்சவையினால் அந்த நாட்டு ஜனாதிபதிக்கு முன்வைத்த ஆலோசனை ஒன்றின் அடிப்படையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மாலைத்தீவின் உள்ளக செயற்பாடுகளில் பொதுநலவாய அமைப்பு அநாவசிய தலையீடுகள் மேற்கொள்வதனாலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொதுநலவாய நாடுகளின் சட்ட திட்டங்களுக்கு இணங்கி செயற்படாதபட்சத்தில் பொதுநலவாய அமைப்பில் இருந்து மாலைத்தீவு விலக்கப்படும் என ஏற்கனவே மாலைத்தீவிற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.