2017ஆம் ஆண்டு நிறைவில், சிரியாவில் தீவிரவாதத்தை முற்றாக ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார்.
பென்டகனில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அவர் இதனை குறிப்பிட்டார்.
தீவிரவாத்தை ஒழிக்க உலகின் சகர தரப்பினரும் இணைய வேண்டும் எனவும் அவர் கோரிக்கைவிடுத்தார்.
இதனிடையே, ஆப்கானிஸ்தானில் மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கைகளின் ஊடாக அமெரிக்கா உள்ளிட்ட ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் படையினருக்கு சிறந்த பலன் கிடைத்துள்ளதாகவும் ஜோன் கெரி குறிப்பிட்டார்.
இதன்படி, ஆப்கானிஸ்தானில் தீவிரவாத்தை ஒழிக்க முடியும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அமெரிக்க ராஜாங்க செயலாளர் பெண்டகனில் வைத்து குறிப்பிட்டார்.