வில்பத்து தேசிய சரணாலயம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம் பெற்றது.
அனுராதபுரம் வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் ஏற்பாட்டில்
முகாமைத்துவ திட்டமிடல் செயற்பாட்டிற்கான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்த சிறப்பு கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது வில்பத்து தேசிய சரணாலயத்தை பயண்படுத்தும் முறை, அங்குள்ள மிருகங்களினால் அந்த பகுதி மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் ஆராயப்பட்டது.
இதேவேளை, வில்பத்து சரணாலயத்தை வருமானம் ஈட்டக்கூடிய வகையில் பயன்படுத்துதல், உள்ளிட்ட விடையங்களும் ஆராயப்பட்டுள்ளன.
குறித்த கலந்துரையாடலில் வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.