திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் காரணமாக அந்த தொகுதியில் நீட் தேர்வு மையங்கள் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தேசிய அளவிலான மருத்துவம் சார்ந்த படிப்புக்கான ‘நீட்’ தேர்வு வருகிற 5-ந் தேதி நாடு முழுவதும் நடக்கிறது. தமிழகத்திலும் மாணவ-மாணவிகள் ‘நீட்’ தேர்வு எழுத அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.
நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவ, மாணவிகளுக்கு ஹால் டிக்கெட்டுகளும் அனுப்பப்பட்டுள்ளது.
மதுரையில் சுமர் 18 ஆயிரம் மாணவ-மாணவிகள் ‘நீட்’ தேர்வு எழுதுகிறார்கள். இதற்காக 30-க்கும் மேற்பட்ட தேர்வு மையங்கள் தயார் செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட இடைத்தேர்தல் பணி காரணமாக ‘நீட்’தேர்வு மையங்கள் திடீரென மாற்றப்பட்டுள்ளது.
3174 மாணவ-மாணவிகளுக்கு புதிய தேர்வு மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் விவரம் வருமாறு:-
ரோல் எண்கள் 410602881 முதல் 410603660 வரை உள்ளவர்களுக்கு மதுரை விரகனூர், வேலம் மாள் நகரில் உள்ள மதுரை- ராமேஸ்வரம் உயர்நிலைப் பள்ளி தேர்வு மையமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
அது தற்போது மதுரை விரகனூர், மதுரை, ராமேசுவரம் நெடுஞ்சாலையில் வேலம்மாள் நகரில் அமைந்துள்ள வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ரோல் நம்பர் 410608041 முதல் 410608640 வரை உள்ளவர்களுக்கு திருநெல்வேலி தியாகராஜா நகரில் உள்ள புஷ்பலதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையமாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அது தற்போது மதுரை அ.வளையாபட்டி அழகர் கோவிலில் உள்ள பாண்டு குடி ஸ்ரீலட்சுமி நாராயணா வித்யாலயா பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளது.
ரோல் நம்பர் 410611401 முதல் 410611880 வரை உள்ளவர்களுக்கு மதுரை நரிமேட்டில் பி.டி. ராஜன் சாலையில் அமைந்துள்ள கேந்திரியா வித்யாலயா தேர்வு மையமாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அது தற்போது மதுரை விரகனூர், மதுரை- ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் வேலம்மாள் நகரில் அமைந்துள்ள வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ரோல் நம்பர் 410611881 முதல் 410612360 வரை உள்ளவர்களுக்கு மதுரை தபால் தந்தி நகர் எக்ஸ்டன்சன் பகுதியில் உள்ள புனித மைக்கேல் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையமாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
அது தற்போது மதுரை எய்ம்ஸ் ரோடு, தனபாண்டியன் நகரில் அமைந்துள்ள தன பாண்டியன் பாலிடெக்னிக் கல்லூரிக்கு மாற்றம் செய்யப்பட் டுள்ளது.
ரோல் நம்பர் 410612841 முதல் 410613320 வரை உள்ளவர்களுக்கு மதுரை திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ள கேந்திரியா வித்யாலயா தேர்வு மையமாக அறிவிக்கப்பட்டிருந்தது. அது தற்போது மதுரை திருநகர் 3-வது பஸ் நிறுத்தம் அருகேயுள்ள ராமசாரி நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளது.
ரோல் நம்பர் 410616201 முதல் 410616560 வரை உள்ளவர்களுக்கு ஏற்கெனவே மதுரை ராஜ்ஸ்ரீ கார் கேரில் உள்ள கோபால கிருஷ்ண நகரில் அமைந்துள்ள மகாத்மா மாண்டசெரி மெட்ரி குலேசன் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையமாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அது தற்போது மதுரை நாகமலை மேற்கு, மேல குயில்குடி சாலையில் அமைந்துள்ள எஸ்.பி.ஓ.ஏ. பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேற்கண்ட ரோல் நம்பர் கொண்ட மாணவ-மாணவிகள் ஹால்டிக்கெட்டுகளையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
‘நீட்’ தேர்வு மையங்களில் ஆடை மற்றும் ஆபரணங்களுக்கு கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் கடுமையாக்கப்பட்டுள்ளது. மூக்குத்தி, மோதிரம், கடிகாரம் அணியவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதிய தேர்வு மையங்கள் தொடர்பான விவரங்களை முன்கூட்டியே அறிந்து கடைசி நேர அலைச்சலை தவிர்க்கும்படி நீட் தேர்வு ஒருங்கிணைப்பாளர் ஹம்சபிரியா தெரிவித்துள்ளார்.