ரஷ்யா – அமெரிக்கா மீண்டும் பேச்சுவார்த்தை

393 0

russyaசிரியாவில் அமைதியை ஏற்படுத்துவது தொடர்பில் ரஷ்யாவும் அமெரிக்காவும் மீண்டும் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளன.

இந்த மாத இறுதியில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக அமெரிக்காவின் ராஜாங்க செயலாளர் ஜோன் கெரியும்இ ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி லவ்ரோவும் சுவிஸில் சந்திக்கவுள்ளனர்.

ஒன்பது தினங்களுக்கு முன்னர் ரஷ்யாவும் அமெரிக்காவும் சிரியா தொடர்பான தங்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளை முறித்துக் கொண்டன.

சிரியாவில் ஏற்படுத்தப்பட்ட போர்நிறுத்தக் காலத்தில்இ ஐக்கிய நாடுகளின் நிவாரண வாகனங்கள் மீது வான் தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்தே இந்த பேச்சுவார்த்தைகள் முறிவடைந்தன.

இந்த நிலையில் தற்போது மீண்டும் ரஷ்யா அலெப்போவில் கடுமையான வான் தாக்குதல்களை நடத்த ஆரம்பித்துள்ள நிலையில்இ இந்த பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.