ஜாஎல – ஏக்கல பிரதேசத்திலுள்ள தனியார் இரும்புக்கம்பி தொழிற்சாலையொன்றில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில் சுமார் 800 பீரங்கி ரவைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன், ரி – 56 ரக துப்பாக்கிக்கான நூற்றுக்கும் அதிகமான ரவைகளும் வெடி மருந்துகளுக்கு சமமான வெடிப்பொருட்கள் தொகையொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி தொழிற்சாலையில் பல சந்தர்ப்பங்களில் வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக அதன் ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.
நீர்கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கமைய நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போதே இந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
சம்பவம் தொடர்பில் குறித்த தொழிற்சாலையின் பொது முகாமையாளர் உட்பட இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன