நாட்டில் தற்போதுள்ள நிலைமையில் பலமான பாதுகாப்பு அவசியமாகின்றது.எனவே ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்காவுக்கு சட்டம் ஒழுங்கு அமைச்சை வழங்குமாறு நாம் கோயிருந்தோம்.
எதிர்வரும் திங்கட்கிழமை இது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வழியுறுத்தவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க தெரிவித்தார்.
இது தொடர்பான சோசனையில் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்கலாக 50 இற்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ளதாகவும் ,இது தேசிய பாதுகாப்பிற்கான ஒரு கோரிக்கையாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் மட்டக்களப்பு ஷரிகா பல்கலைகழகம் தொடர்பில் தெரிவித்த அவர்,கடந்த 2013 ஆம் ஆண்டு இக் கல்லூரி தொடர்பான அப்போதைய உயர் கல்வி அமைச்சராக செயற்பட்ட சரத் அமுனுகமவிடம் தற்போதைய கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லா கையெழுத்திட்டு அதற்கு அனுமதி கோரியுள்ளார்.
எனினும் தற்போது வரையில் அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை. 2015 ஆம் ஆண்டு தேசிய அரசாங்கத்தாலும் எந்த அனுமதியும் வழங்க்கபடவில்லை.
மட்டகளப்பு பல்கலைக்கழகம் ப்ரைவட் லிமிடட் என்ற கணக்கிற்கு சவுதி அரேபியாவிலிருந்து சுமார் 3 பில்லியன் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் இதனை வைத்து மீண்டும் மீண்டும் தேவையற்றி பிரச்சினைகளை ஏற்படுத்த வேண்டியதில்லை. சாதாரணமாக மட்டக்களப்பு பல்கலைக்கழகம் என்ற பெயரில் அனுமதிப்பதற்கே அரசாங்கம் எதிர்பார்க்கின்றது என்றார்.