நாடளாவிய ரீதியில் சகல பிரதேசங்களிலுமுள்ள பாடசாலைகளில் பொலிஸார், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளை ஒன்றிணைத்து சிவில் பாதுகாப்பு சபை உருவாக்கப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஷாந்த பண்டார தெரிவித்தார்.
சுதந்திர கட்சி தலைமைக் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியளாலர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த நிலைமைகளை காரணம் காட்டி தொடர்ந்தும் பாடசாலைகளை மூடுவது உரிய தீர்வாகாது. பாடசாலைகளில் பெற்றோர் குழுவொன்றை அமைத்து, அவர்களுக்கு பிரத்தியேக அடையாள அட்டையொன்றினை வழங்கி அவர்கள் மூலமாக சோதனைகளை முன்னெடுக்கும் வகையில் ஏதேனும் செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் இதன்போது குறிப்பிட்டார்.