குடிவரவு மற்றும் குடியல்கவு சட்டத்தினை மீறி சட்டவிரோதமாக இலங்கையில் தங்கியிருந்த நான்கு வெளிநாட்டுப் பிரஜைகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த வெளிநாட்டுப் பிரஜைகள் நால்வரும் அவிசாவளை -உக்வத்தை மற்றும் கிரேண்ட்பாஸ் பகுதிகளில் வைத்தே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
36, 31 வயதுகளையுடைய நைஜீரிய நாட்டை சேர்ந்த இருவரும், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் நாடுகளை சேர்ந்த 24 மற்றும் 25 வயதுடைய இருவரும் இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் ஆவார்.