கடிதங்களுடன் கைதான மூவரிடமும் மேலதிக விசாரணை

221 0

இன முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட 600 கடிதங்களுடன் கைதான 03 பேரும் மேலதிக விசாரணைக்காக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இனமுறுகளை ஏற்படுத்தும் வகையிலும், ஜனாதிபதிக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையிலும் தயாரிக்கப்பட்ட 600 கடிதங்களுடன் ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர் ஒருவரின் பணியாளர்கள் மூவர் நேற்று இரவு கொழும்பு மத்திய அஞ்சலகத்தில் கைதாகினர்.

குறித்த 600 கடிதங்களையும் மத்திய அஞ்சலகத்தில் இருந்து அனுப்புவதற்காக பிரவேசித்த வேளையில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.<

கண்டி பிரதேசத்தில் உள்ள பல விகாரைகளுக்கு இந்த கடிதங்கள் அனுப்பி வைக்கப்படவிருந்தன. கைதானவர்கள் 24, 28 மற்றும் 41 வயதுகளை உடையவர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.