புகையிரதங்களின் பெட்டிகளை அதிகரிப்பதன் மூலம் பயணிகள் போக்குவரத்து தொடர்பான நெருக்கடிகளைத் தணிக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் காலை, நண்பகல், மாலை நேரங்களில் முக்கிய நகரங்களின் பிரதான வீதிகள் அனைத்தும் போக்குவரத்து நெரிசல் காரணமாக பெரும் நெருக்கடியை எதிர்கொள்கின்றன.
அத்துடன் பயணிகளும் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்ள நேரிடுகின்றது.
இந்நிலையில் பயணிகள் போக்குவரத்து நெருக்கடியை தணிக்கும் தீர்வொன்றாக அனைத்து புகையிரதங்களிலும் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க புகையிரத திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இதற்காக புதிய ரயில் பெட்டிகள் கொள்வனவுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
எனினும் ரயில் பயணங்களில் பயணிகள் எதிர்நோக்கும் அசௌகரியங்கள் மற்றும் புகைத்தல் தடை போன்றவற்றை உரிய முறையில் கையாண்டால் புகையிரதப்பயணம் பொதுமக்களை கவரக் கூடிய வகையில் மாற்றம் பெறும் என்று பயணிகள் பலரும் கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.