பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை சட்டம், ஒழுங்கு அமைச்சராக நியமிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க விடுத்த வேண்டுகோளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்தோடு தாமே சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் நடவடிக்கைகளை நேரடியாக கண்காணித்து வருவதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 30ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, அவரது இல்லத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர்களான லக்ஷ்மன் கிரியெல்ல, ராஜித சேனாரத்ன, கபீர் காசிம், மலிக் சமரவிக்ரம ஆகியோர் சந்தித்து கலந்துரையாடினர்.
இதன்போது நாட்டின் தற்போதைய நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை சட்டம், ஒழுங்கு அமைச்சராக நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரியிருந்தார்.
எனினும் இதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.