நீர்கொழும்பில் கைதான ரொயிட்டர்ஸ் ஒளிப்பட ஊடகவியலாளருக்கு விளக்கமறியல்!

232 0

ரொயிட்டர்ஸ் செய்தி சேவையின் ஒளிப்பட ஊடகவியலாளர் சித்திக் அஹமட் டனீஸை எதிர்வரும் 15ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு – கட்டானை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றிற்குள் அத்துமீறி பிரவேசிக்க முற்பட்டதாக தெரிவித்து அவர் நேற்று கைது செய்யப்பட்டிருந்தார்.

கட்டானை புனித செபஸ்டியன் தேவாலயத்தில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலில் உயிரிழந்த மாணவி ஒருவர் குறித்த செய்தியை திரட்டுவதற்காக அவர் பாடசாலைக்குச் சென்ற போது,  பொலிஸாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பின்னர் அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, எதிர்வரும் 15ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தியாவை தளமாக கொண்டு செயற்படும் அவர் புலிட்சர் சர்வதேச விருதினை வென்ற ஒளிப்பட ஊடகவியலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.