பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தால் பொதுமக்களுக்கு பாதிப்பில்லை – லக்ஷ்மன்

288 0

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தினால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என அமைச்சரும் சபை முதல்வருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். 

பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு மாற்றீடாக புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை அரசாங்கம் கொண்டுவர தீர்மானம் எடுத்துள்ள நிலையில் அதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பினை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் அரசாங்கம் எவ்வாறு  கையாளப்போகின்றது என வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், 

பயங்கரவாத தடைச் சாட்டுக்கு மாற்றீடாக புதிய பயங்கரவாத தடுப்பு சட்டத்தை கொண்டுவரும் முயற்சிகள் கடந்த ஆண்டே அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதற்கான வரைபுகளை கடந்த ஆண்டு பாராளுமன்ற குழுவில் சமர்பிக்கப்பட்டுள்ளது. அவர்களின் பதில் இன்னமும் வரவில்லை. இதில் சகல தரப்பினதும் ஒத்துழைப்புகள் அவசியம். 

தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாக மட்டுமே கருதக்கூடாது. எதிர்க்கட்சிகள் இதில் முழுமையான ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும். இப்போது நாட்டில் பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்றுள்ள நிலையில் இப்போதாவது நாம் புதிய சட்டத்தை கொண்டுவந்து தேசிய பாதுகாப்பு மேலும் உறுதிப்படுத்த வேண்டும். இது பொதுமக்களுக்காக நாம் செய்யும் கடமை என்பதை உணரவ வேண்டும். 

இந்த விடயத்தில் அரசாங்கம் முன்வைத்துள்ள பிரேரணையில் ஏதேனும் திருத்தங்களை கொண்டுவர எதிர்க்கட்சிகள் தயாராக இருந்தால் அதற்கும் இடமளிக்க நாம் தயார்.