சாய்ந்தமருதில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புத தேடுதலின்போதுஇடம்பெற்ற தற்கொலைக் குண்டுதாரியின் இரு சகோதரர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கல்முனை – சாய்ந்தமருது பகுதியில் பயங்கரவாதிகள் தங்கியிருந்த வீடொன்றை பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்து தேடுதல் மேற்கொண்டபோது அங்கிருந்த பயங்கரவாத குழுவுக்கும் இராணுவத்தினருக்குமிடையில் இடம் பெற்ற பரஸ்பர துப்பாக்கிச்சூட்டு பிரயோகம் மற்றும் குண்டு தாக்குதலில் போது 15க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் குறித்த தாக்குதல் சம்பவத்தில் தற்கொலைக்குண்டுத் தாக்குதல் நடத்திய எம்.சி.எம் ரில்வானின் இரு சகோதரர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.